கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் காட்டும் பராந்தக நெடுஞ்சடையப் பாண்டியனின் வரலாறு/Inscriptions and Copper Plates on the History of Parantaka Netuncataiya Pandian

Autor: முனைவர் செ. சாந்தி/Dr S. Santhi
Jazyk: tamilština
Rok vydání: 2021
Předmět:
DOI: 10.5281/zenodo.5748039
Popis: தமிழ்நாட்டு வரலாற்றில் சங்க காலம் மிக முதன்மை வாய்ந்ததொரு காலமாகும். சங்க காலத்திலிருந்து தமிழருடைய வரலாறு சீராகத் தொடங்குகிறது எனலாம். வரலாற்றாசிரியர்களிடையேயும், அறிஞர்களிடையேயும் இக்காலத்தை வரையறுப்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. எனினும் இச்சங்ககால இலக்கியஙகளே அக்கால வரலாற்றுக்குத் துணையாக அமைகின்றன. சங்க இலக்கியங்கள் ஏராளமான வரலாற்றுச் செய்திகளை நமக்குத் தந்தவண்ணமிருக்கின்றன. அன்று நிலவிய சமுதாய, அரசியல் நிலைகளைப் பற்றித் தெளிவான கருத்துக்களை உள்ளடக்கியுள்ளன. இக்காலத்தில் மூவேந்தர்களான சேர, சோழ, பாணடிய மன்னர்களின் ஆட்சியைப் பற்றியக் குறப்புகளும் இலக்கியங்களில் காணப்படுகின்றன. சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் களப்பிரர்கால ஆட்சியானது கிபி4ம் நூற்றாண்டு முதல் கிபி 5ம் நூண்டு வரை செயல்பட்டது எனலாம். அதன் பின்பு பல்லவர்களும், முற்காலப்பாண்டியர்களும் களப்பிரர்களைத் தோற்கடித்து தங்களது ஆட்சியை நிறுவினர். இவற்றுள் முற்காலப் பாண்டியர் ஆட்சியில் வேள்விக்குடி செப்பேடு, சீவரமங்கலச் செப்பேடு மற்றும் கல்வெட்டுகள் காட்டும் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனின் வரலாறை கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் காட்டும் பராந்தக நெடுஞ்சடையப் பாண்டியனின் வரலாறு என்னும் தலைப்பில் இக்கட்டுரையானது கீழ்க்கண்டவாறு விளக்கப்படுகின்றது. In the history of Tamil Nadu history, Sangam Age places its first place. Tamils history has been started from the beginning of the Sangam Age. There are many differences in calculating the Sangam Age among historians and scholars. Although, this Sangam Literature stand as evidence to prove the history and antiquity of the Tamils. Sangam literature gives us lots of news about historical evidence. It caters for social, cultural and political situations in a subtle manner. There is much evidence about the rule and life of the triumvirs Cheras, Cholas and Pandias. After the end of the Sangam Age, the Kalabharas ruled Tamil Nadu in the 4th and 5th centuries. The Pandias and the Pallavas ended the Kalabhara rule and then the Pallavas and the First generation Pandias ruled Tamil Nadu. In the Pandian country, Parantaka Netuncataiya Pandian ruled the country efficiently and there are inscriptions about him in the Velvikudi and Sivaramangala Copperplates. This chapter culls out the evidence based on the archaeological evidence about King Parantaka Netuncataiya Pandian.
Databáze: OpenAIRE